சிங்கப்பூர் MRT ரயிலில் சிக்கி தவித்த 50 பயணிகள் – என்ன நடந்தது?

SMRT/Twitter

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உட்லண்ட்ஸ் நார்த் மற்றும் கால்டிகாட் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் சிக்னல் கோளாறு காரணமாக இன்று காலை (ஏப்ரல் 27) பாதிக்கப்பட்டன.

சிக்னல் தொடர்பான கோளாறு காரணமாக, அந்த வழித்தடத்துக்கு இடையே இரு திசைகளிலும் தடங்கல் ஏற்பட்டதாக SMRT நிறுவனம் இன்று காலை 7.31 மணிக்கு ட்விட்டரில் தெரிவித்தது.

இதனை அடுத்து, காலை 8.45 மணியளவில் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்குள் பயணிகள் உள்ளே செல்ல முடியவில்லை. இந்த தடங்கல் காரணமாக சுமார் 50 பயணிகள் ரயிலில் சிக்கி தவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அதனை சரிசெய்ய பொறியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் காலை 8.10 மணிக்கு பயணிகள் உட்லண்ட்ஸ் நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனர்.

இந்நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக மீண்டு வருவதாக காலை 9.01 மணிக்கு SMRT ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக காலை 9.09 மணிக்கு செய்தியில் புதுப்பிக்கப்பட்டது.