இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கான எல்லைகளை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

ஆனால், COVID-19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறைக்கு மனிதவளத்தை அனுமதிக்கும் நடவடிக்கைகள் குறித்த தெளிவையும் நிறுவனங்கள் கோருகின்றன.

விடுதிகளில் முடங்கி கிடக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் எப்படி உதவுவது?

ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பல நிறுவனங்கள், அக்டோபர் 27 முதல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளின் ஊழியர்களின் விகிதம் குறித்து நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளன என்று சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது வழியாக செல்லவோ அனுமதி வழங்கப்பட்டது. இதில் குறுகிய கால வருகையாளர்கள் சேர்க்கப்படவில்லை.

தெங்கா வீட்டுவசதி வாரியத்தில் இரண்டு எக்சிகியூட்டிவ் காண்டோமினியம் மற்றும் பொது வீட்டுத் தோட்டத்தை கட்டும் “ஸ்ட்ரெய்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்”, இந்த தளர்வுகளை வரவேற்றது. அதன் பெரும்பாலான ஊழியர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“உங்களுக்குத் தெரியும், தொழில்துறையில் தற்போது ஊழியர்களின் பற்றாக்குறை உள்ளது. சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றவர்களுக்கு மாற்றாக வரும் ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை,” என்று சேனல் நிர்வாக இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான கென்னத் லூ கூறினார்.

கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் work permit அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 60,000 அல்லது 16% குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் மே 11 அன்று பாராளுமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.