சிங்கப்பூரில் ART கருவிகளின் தேவை அதிகரிப்பு – உள்ளூரிலேயே தயாரிக்க நிறுவனங்கள் விண்ணப்பம்!

Pic: Reuters

சிங்கப்பூரில் ART (ஆண்டிஜன் விரைவுப் பரிசோதனை) கருவிகளை உள்ளூரிலேயே தயாரிக்க அல்லது உபகரணங்களை சேர்த்து உருவாக்க ஆறு நிறுவனங்கள் அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் நேற்று (மார்ச் 02) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் எந்த ஒரு நிறுவனமும் ART பரிசோதனை கருவிகளை தயார் செய்யவில்லை என்றும், இத்தகைய விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.

மயங்கி கீழே விழுந்த 25 வயது தேசிய ஆயுதப் படை சேவையாளர் மரணம்

ART பரிசோதனை கருவிகளை தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் அவை வர்த்தக, தொழில் அமைச்சின் கடன் திட்டங்களுக்கும், மானியங்களுக்கும் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும் என துணையமைச்சர் லோ யென் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த துணையமைச்சர் லோ யென், இதர ART கருவிகள் விற்பனைக்கு ஏற்றதா என்பதை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாகவும் முடிந்தால், ஆல்டெஸ்ட், இன்டிகேய்ட் ஆகிய இரண்டு பரிசோதனை கருவிகள் சிங்கப்பூரில் விற்பனைக்கு வருவதை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.

‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!