வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த கட்டுமான நிறுவனம்: பண பரிசு, பிரியாணி என அசத்தல்!

Photo: Calvin Yeow via Mothership

தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் உள்ளூர் தொலைத்தொடர்பு மற்றும் கட்டுமான நிறுவனம் தனது கிடங்கை அலங்கரித்து, அதன் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு பிரியாணி விருந்து அளித்தது.

ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் “ரெட் பாக்கெட்” என்னும் பணப் பரிசையும் அந்நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியது, அது நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.

தொற்றுநோய்களின் கட்டுப்பாடுகள் மத்தியில் தனது ஊழியர்களுக்கு பண்டிகை மகிழ்ச்சியை கொண்டு வர விரும்பியதாக நிறுவனத்தின் இயக்குனர் கால்வின் இயோவ் கூறினார்.

சிங்கப்பூரில் வேலை என்றதும் மயங்கிய வாலிபர் – சுமார் 3.5 லட்சம் ரூபாய் பறிபோன சோகம்

அவரது நிறுவனமான லக்கி ஜாயின்ட் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட், துவாஸில் உள்ள தங்கள் கிடங்கில் தீபாவளி அலங்காரங்களை அமைத்ததாக கூறினார்.

தொற்றுநோய்களின் மத்தியில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் பலர் சொந்த நாடு திரும்ப முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அதற்கு பதிலாக ஊழியர்களுக்கு பண்டிகை மகிழ்ச்சி கொண்டு சேர்க்கும் வகையில் கிடங்கில் தீபாவளி அலங்காரங்களை அமைக்க அவரது நிறுவனம் முடிவு செய்தது.

இதில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீபாவளி பெண்டோ பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

அந்த அலங்காரங்களில் வகைவகையாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரில் 100,000 ஊழியர்களுக்கு S$4,000 பண அன்பளிப்பு – சுகாதார அமைச்சர்