தொழிலாளரை வேண்டுமென்றே இரும்புக் கம்பியால் அடித்த முதலாளி – சம்பளப் பாக்கியைக் கேட்டது குற்றமா!

construction fire SCDF hospital
construction worker hit by iron rod that owner salary pending
சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலாளராக பணிபுரிந்த பங்களாதேஷைச் சேர்ந்த 39 வயது மியா ரஷீட்டை அவரது முதலாளி இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.6
7 வயதான முதலாளி ஹோ சியாவ் காய் சம்பளப் பிரச்சினையால் தொழிலாளரைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.ஊழியரை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக ஹோ ஒப்புக் கொண்டார்.நிறுவனத்தின் முதலாளிக்கு 3 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

தொழிலாளர் ரஷீத் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சம்பவம் நிகழ்ந்துள்ளது.ரஷீட் அவரது சம்பளப் பாக்கியைத் தருமாறு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனத்தின் முதலாளி ஹோவிடம் கேட்டிருக்கிறார்.
மறுநாள் சம்பளத்தைத் தருவதாக ஹோ கூறியுள்ளார்.மறுநாள் முதலாளியை சந்தித்து தனது சம்பளத்தை தரக் கோரி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த முதலாளி சுமார் அரை கிலோ எடையுள்ள இரும்புக் கம்பியால் ரஷீட்டை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைவதற்கு முன் ஹோ அங்கிருந்து தப்பி விட்டார்.நீதிமன்றத்தில் ஆஜரான ஹோ தொழிலாளி ரஷீட்டின் மருத்துவக் கட்டணத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் ஹோவின் தண்டனைக் காலம் தொடங்கும்.வேண்டுமென்றே தாக்கிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது 5000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.