சேர்ந்து திருடுவோமா! ‘பீட்சா’ பட தம்பதியினர் போல மோசடியில் ஈடுபட்ட சிங்கப்பூர் தம்பதியினர் – லாரியின் கண்டெய்னரில் பதுங்கி தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

couple-luxury-goods-flee-singapore

சிங்கப்பூரைச் சேர்ந்த திருமணமான தம்பதியினர் 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்துசுமார் S$32 மில்லியன் வசூலித்து பின்னர் திருப்பித் தரமுடியாமால் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.ஜூன் 27 அன்று சந்தேகத்தின் பேரில் 26 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்தது.அவரது மனைவி விசாரணைக்கு காவலருக்கு உதவிய நிலையில்,பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜூன் 28 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பாஸ்போர்ட்டை ஒப்படைத்து சிறிது நேரத்திலேயே தம்பதியினர் தொடர்புகொள்ள முடியாமல் போனதாக SPF கூறியது.அவர்கள் இருவரும் ஜூலை 4 ஆம் தேதி லாரியின் கன்டெய்னர் பெட்டியில் மறைந்திருந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அவர்கள் சிங்கப்பூரிலிருந்து தப்பி மலேசியா வழியாக சென்று தற்போது தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

40 வயதான மலேசியர் முகமது அலியாஸ், தம்பதிகளை சட்டவிரோதமாக வெளியேற , லாரியின் கண்டெய்னர் பெட்டியில் மறைத்து வைத்து உதவியுள்ளார்.உதவிய குற்றத்திற்காக அந்த நபர் ஜூலை 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.தப்பிச் சென்று தலைமறைவான தம்பதியர் மீது சுமார் 180 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பிடிவாரன்ட் மற்றும் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு டெலிகிராம் குழு, பிராண்டட் பொருட்களுக்கான ஆர்டர்களை இன்னும் பெறவில்லை என்று கூறியது.நிறுவனம் ஒரு குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால் வணிகத்தின் பதிவு நிறுத்தப்படலாம். மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.