அடுத்த கோவிட் அலை வருவதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஒங்

File Photo: Health Minister Ong Ye Kung

கோவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உலக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் சிங்கப்பூரில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 80000 பேர் இன்னும் முதலாவது தடுப்பூசி(Booster) போட்டுக் கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சர் Ong Ye Kung தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கோவிட்-19 தொற்றினால் கடுமையாக பாதிக்கப்படும் அல்லது மரணிக்கும் அபாயம் மூன்று மடங்கு குறைவு என்று அமைச்சர் கூறியுள்ளார்.இரண்டு தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்ட 1000 மூத்த குடிமக்களில் 10 பேர் தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளது.

ஆனால் மூன்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட 1000 மூத்த குடிமக்களில் மூன்று பேர் மட்டுமே அப்படி மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.அதேபோல,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அந்த அபாயம் மிகவும் அதிகம்.அதாவது 1000 பேரில் 40 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட வேண்டிய அளவிற்கு கடுமையான தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் கூடுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.அடுத்த கோவித் அலைக்கு முன்னதாக மூத்த குடிமக்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி அமைச்சர் ஒங் டிக் டாக் காணொளி வாயிலாக வலியுறுத்தினார்.

மூத்தகுடி மக்கள் எந்த தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் ,நடமாடும் தடுப்பூசிக் குழுவினர் விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அமைச்சர் தெரிவத்துள்ளார்.