சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஐந்து நோய்த்தொற்று பதிவு

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) நிலவரப்படி, புதிதாக 715 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், எட்டு இறப்புகள் கொரோனா வைரஸால் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இன்று (டிச. 7) முதல் VTL விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை

சமீபத்திய தொற்றுநோய் தொடர்பான புள்ளிவிவரங்கள் சுகாதார அமைச்சகத்தின் பேஸ்புக் பதிவு மூலம் இரவு 10 மணிக்கும் மற்றும் அமைச்சகத்தின் இணையதளத்திலும் கிடைக்கப்பெற்றன.

செவ்வாய்கிழமை முதல் இத்தகைய புள்ளிவிவரங்கள் குறித்த தினசரி செய்திக்குறிப்புகளை வெளியிடுவதை நிறுத்துவதாகக் திங்களன்று MOH கூறியது.

புதிய பாதிப்புகள், உள்நாட்டில் சமூக அளவில் 700 நோய்த்தொற்றுகளையும், வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடங்களில் ஐந்து நோய்த்தொற்றுகளையும் உள்ளடக்கியுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 771 பேர் COVID-19 தொற்று காரணமாக இறந்துள்ளனர்.

வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் என்பது கடந்த திங்கள் நிலவரப்படி பதிவான 0.64 இலிருந்து 0.63ஆக குறைந்தது.

சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 24 பேர் தனிமை – தீவீர கண்காணிப்பு