சிங்கப்பூரில் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட கோமாதா… இந்துக்களின் புனித முறை

/cow-hdb-housewarming
Credit: Reddit

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு பிளாக்கில் இந்து சமய முறைப்படி நடந்த புதுமனை புகுவிழாவில் கோமாதா என்னும் பசுமாடு கலந்துகொண்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக இந்துக்கள் முறைப்படி, புதிதாக வீடு குடிபெயரும் போது கோமாதாவை வீட்டுக்குள்ளே அழைத்து சென்று அதற்கு படையல் வைப்பர்.

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள் செய்யும் வேலை… சொந்த நாட்டுக்கு ஊழியர்கள் செல்லும் நிலை – இனி மாறும் MOM நம்பிக்கை

இதனால் அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தமிழ்நாட்டில் இது சாதாரணமாக நடைபெறும் ஒரு சம்பிரதாயம்.

மேலும், புதிய வீட்டில் பசு சிறுநீர் கழித்தாலும், மலம் கழித்தாலும் அது புண்ணியமாகவும் கருதப்படும்.

சிங்கப்பூரில் இது அதிகம் நடைபெறாது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், மூன்று பேர் HDB பிளாட்டுக்குள் பசுவை அமைதியாக அழைத்துச் செல்கின்றனர்.

வீட்டிற்குள் செல்ல மறுக்கும் பசுவை பின்னால் இருந்து ஒருவர் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள்ளே செல்லும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.