தொடரும் ஊழியர் மரணம் ! – பணியிட பாதுகாப்பு போதுமானதா? MOM நடவடிக்கை!

workers safety lapses death 2 jailed mom
(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் இந்தாண்டு வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பணியிட விபத்தில் மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2021இல் பதிவான பணியிட இறப்புகளை விட இந்தாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தாண்டு 45 பணியிட மரணங்கள் பதிவாகியுள்ளன.கடந்த ஆண்டு 37 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.இன்று காலை சரியாக 7.53 மணியளவில் 601 ரைஃபிள் ரேஞ்ச் சாலையில் விபத்து நேர்ந்ததாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

31 வயதான சிங்கப்பூரர், பாரந்தூக்கியில் கொண்டுசெல்லப்பட்ட இயந்திரம் அவர் மீது விழுந்ததில் விபத்துக்கு ஆளானார்.இயந்திரம் விழுந்ததில் அந்த நபர் சுயநினைவிழந்தார்.உடனடியாக Ng Teng Fong பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.பாரந்தூக்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்தும்படி, தொடர்புடைய நிறுவனத்துக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.