Credit Suisse வங்கியால் தனக்கு 1 மில்லியன் டாலருக்கு மேல் நஷ்டம்; நீதிமன்றத்தில் மூதாட்டி வழக்கு.!

Pic: Reuters

சிங்கப்பூரில் இயங்கி வரும் கிரெடிட் சுவிஸ் (Credit Suisse) வங்கியில் கடந்த 2020ஆம் ஆண்டு பங்கு வர்த்தகச் சந்தை நலிவடைந்தபோது தமக்கு 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நஷ்டம் ஏற்பட்டதற்கு வங்கியின் தொடர்பு மேலாளர்தான் காரணம் என கூறி 68 வயதுமிக்க ஓய்வுபெற்ற மூதாட்டி ஒருவர் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

வாட்ஸ்அப் குரூப்பில் குழந்தைகள் ஆபாச வீடியோ: சிங்கப்பூரில் வெளிநாட்டவருக்கு சிறை.!

68 வயதான ஜேனட் டே (Janet Tay) என்ற அந்த மூதாட்டி, தமது வங்கிக் கணக்கில் பற்றாக்குறை நிலவியது பற்றி வங்கி மேலாளர் முறையாக தெரிவிக்காத காரணத்தால் பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சொத்து மதிப்புக்கும் கடன் தொகைக்குமான விகிதத்தையும் மேலாளர் முறையாக உறுதிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்த ஆவணங்களில் மூலம் கிடைக்கும் நஷ்டஈடு தொகையை தான் அறச்செயலுக்கு ஒதுக்கியுள்ளதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் அறநிதிக்கு அந்த நஷ்டஈடு தொகையை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணை காணவில்லை – உதவுங்கள் என போலீஸ் வேண்டுகோள்