பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இந்திய ஊழியருக்கு சிறை தண்டனை

Photo: Getty

கோவிட்-19 ஆதரவு மானியத்திலிருந்து பணத்தைக் கோரும் நோக்கத்தில், 48 வயதான இந்திய பெண் போலியான பணிநீக்க ஆவணத்தை உருவாக்கினார்.

ராஜகோபால் மாலினி என்ற அந்த பெண் வேலை பார்த்த கூட்டுரிமை வீட்டின் பராமரிப்புக் கட்டணமாக குடியிருப்பாளர்கள் கொடுத்த பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய இந்தியா: மீண்டும் தொடங்கும் தனிமை இல்லா விமான சேவை!

அதே போல, கடந்த ஆண்டு செப்டம்பரில், திருடப்பட்ட கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தனது குழந்தைகள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் ஷாப்பிங் சென்று பொருட்களையும் வாங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்த குற்றங்களுக்காக, மாலினிக்கு வெள்ளிக்கிழமை (டிச. 10) 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் குடியிருப்பாளர்கள் கொடுத்த பணத்தை மொத்தமாக S$4,000க்கு மேல் கையாடியதாக கூறப்படுகிறது. இது பணம் கொடுத்த ஒரு குடியிருப்பாளர் பணம் செலுத்தத் தவறியதாக நோட்டீஸ் பெற்றதை அடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.

அவர், தனது குழந்தைகள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து, திருடப்பட்ட கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மொபைல் போன்கள் மற்றும் பரிசு அட்டைகள் உள்ளிட்ட S$13,500 மதிப்புள்ள பொருட்களையும் வாங்கியுள்ளார்.

மாலினியின் குடும்பம் வசதி குறைவானது என்றும், அதனால் தன் குழந்தைகள் மீது அன்பு காட்டவே இவ்வாறு செய்ததாக அவரின் வழக்கறிஞர் கூறினார்.

ION ஆர்ச்சர்ட் மாலில் உள்ள கை உலர்த்தி இயந்திரத்தை பயன்படுத்திய சிறுமியின் விரல் துண்டிப்பு