காகங்களை புடிக்க இப்படி ஒரு ட்ரிக்கா ! – காகங்களின் எண்ணிக்கையை குறைக்க சிங்கப்பூரை சேர்ந்த நபர் எடுத்த புதுமுயற்சி

crow singapore

சிங்கப்பூரில் தற்காலிக வலையில் காகங்களைப் பிடித்து, அவற்றில் குறைந்தது 7 ஐ வீட்டுத் தோட்டத்திலிருந்து அகற்றும் காணொளி சமூக வலைதளமான Redditல் June 1, 2022 அன்று பகிரப்பட்டது. அந்த 6 1/2 நிமிட காணொளியில், வலைகள் மற்றும் கம்புகளால் உருவாக்கப்பட்ட தற்காலிக ஏணிப் பொறியில் ஏழு காகங்கள் சிக்கியிருப்பதைக் காணமுடிந்தது.

அந்த கானொளியில், பறவைகளை திடுக்கிட வைக்காமல் அக்காகங்களை பொறுமையாக வெளியேற்றுவதை காணமுடிந்தது. பின்னர் அந்த நபர் தனது வலையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பறவையையும் சிக்க வைத்து கூண்டிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேற்றினார். அவர் அகற்றிய காகங்கள் ஒரு செல்லப் பிராணி பெட்டியின்யின் உள்ளே வைக்கப்பட்டன.

20 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூரில் காகங்களின் மேலாண்மை நிர்வாகம் துப்பாக்கியால் சுட்டு அவற்றின் எண்ணிக்கையை 100,000 இலிருந்து 10,000 ஆகக் குறைக்க திட்டமிட்டது.இச்செயல் பல்வேறு சிக்கல்களை முன்வைத்து, மனிதாபிமான முறைகளைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பியது.

பிப்ரவரி 2019 இல், ஒரு துணை காவல் அதிகாரி அந்த சுற்றுவட்டாரத்தை முறையாக பகுப்பாய்வு செய்யாமல் காகங்களை கொல்ல முயன்ற போது 23 மீ தொலைவில் உள்ள ஒரு HDB பிளாட்டின் முன் கதவில் பல குண்டுகளை சுட்டார். இச்செயல் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு கொல்லுதல் ஒரு பயனற்ற நீண்ட கால தீர்வாக இருந்து வந்தது

சிங்கப்பூரில் காக்கை இனத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, மனிதர்களால் கிடைக்கும் உணவே காரணம் என்று தேசிய மேம்பாட்டு அமைச்சகம் (MND) பிப்ரவரி 2021ல் காகங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கான முறைகள் குறித்த பாராளுமன்ற கேள்விக்கு உரையாற்றியபோது இதை மீண்டும் வலியுறுத்தியது.

மேலும் காகத் தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக 2020 ஆம் ஆண்டில் 2,750 காகம் தொடர்பான வழக்குகளை NParks பெற்றதாகவும் கூறியது. மேலும் NParks புதுமையான பொறி வடிவமைப்புகளை” உருவாக்கும் என்று MND கூறியது.