‘நண்பேண்டா’ இப்படி ஒரு நண்பன் கிடைத்தால் என்னவாகும்? – கிரிப்டோ வர்த்தகத்தில் நண்பர்களை மோசடி செய்த சக நண்பர்

Singapore crypto bourse enters India despite pending curbs
Singapore crypto bourse enters India despite pending curbs
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று (ஆக. 16) மூன்று முறை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.கிரிப்டோகரன்சிகள் மற்றும் அந்நிய செலாவணி வர்த்தகம் போன்ற வர்த்தகங்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றதாக அவர் தனது நண்பர்களிடம் பொய் கூறி அவர்களின் பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளார்.தற்போது 20 வயதாகும் அந்த நபர் குற்றங்களைச் செய்த போது 18 வயதுக்குட்பட்டவராக இருந்தார்.

குற்றவாளியின் வகுப்பறைத் தோழன் அவர் மூலம் S$188,000க்கு மேல் முதலீடு செய்துள்ளார்.பின்னர் அவர் தனது வெற்றிகரமான பிட்காயின் வர்த்தகத்தைப் பற்றி தனது நண்பர்களிடம் பொய் சொன்னார், மேலும் அவர் மூலம் முதலீடு செய்தால் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளித்தார்.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 188,000 S$ க்கும் அதிகமாக அவனுடைய 17 வயது வகுப்புத் தோழன் ஏமாற்றப்பட்டான்.

இதே போல குற்றவாளியின் வகுப்புத் தோழியரும் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதால் அவர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.
குற்றவாளி தனது நண்பர்களுக்கு மொத்தம் S$82,000 திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது.அவர் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் வெற்றி பெற்றதாகத் தெரிந்தால், அவரது நண்பர்கள் அவரை அதிகம் விரும்புவார்கள் என்று எண்ணி பொய் கூறியதாக அவர் தரப்பு கூறுகிறது.

தனது வாடிக்கையாளருக்கு சோதனைக் காலத்துடன் ஒப்பிடும்போது கடுமையான தண்டனையான சீர்திருத்தப் பயிற்சியை நீதிமன்றம் கருத வேண்டாம் என்று குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.சீர்திருத்தப் பயிற்சி பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.