விரிவுபடவுள்ள சைக்கிள் ஓட்டும் பாதை மற்றும் உட்கட்டமைப்பு – நிலப்போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்புகள் !

tampines cycling paths

சைக்கிள் ஓட்டுதலுக்கான உட்கட்டமைப்பு அடுத்த நான்கு ஆண்டுகளில் டாம்பைன்ஸில் கணிசமாக விரிவுபடுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஜூலை 13 அன்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

டேம்பைன்ஸ் மற்றும் அதன் பக்கத்துக்கு நகரங்களில் உள்ள பல்வேறு மக்களை சிறப்பாக இணைக்க மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளுக்கு ஒரு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

13 கிமீ சைக்கிள் ஓட்டும் புதிய பாதைகளை 2026 ஆம் ஆண்டிற்குள் டாம்பைன்ஸ்  கொண்டிருக்கும் என்று LTA தனது பதிவில் தெரிவித்துள்ளது. இது சைக்கிள் ஓட்டும் பாதைகளின் மொத்தப் பரப்பை  சுமார் 30 கிமீ க்கு கொண்டு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாசிர் ரிஸ் மற்றும் சிமேய்யில் சைக்கிள் ஓட்டுபவர்களை நகரத்தோடு இணைக்கும் புதிய சைக்கிள் பாலம் மற்றும் அண்டர்பாஸ் ஆகியவற்றை LTA முன்னிலைப்படுத்தியுள்ளது. டாம்பைன்ஸ் எக்ஸ்பிரஸ்வேயின் குறுக்கே கட்டப்படும் இந்த சைக்கிள் பாலம், சைக்கிள் ஓட்டுபவர்கள் டாம்பைன்ஸ் மற்றும் பாசிர் ரிஸ் இடையே தடையின்றி பயணிக்க அனுமதிக்கும் வண்ணம் வரவிருக்கிறது. Tampines மற்றும் Simei ஐ இணைக்கும் Tampines Street 31க்கு இணையாக வரவிருக்கும் புதிய சைக்கிள் ஓட்டும் சுரங்கப்பாதையையும் LTA கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.