ஒருவரை தாக்கும்போது படம்பிடித்த மற்றொரு ஆடவரை தாக்கிய சிவகார்த்திக்குக்கு சிறை

(Photo: iStock)

ஒருவரைத் தாக்கும்போது கேமராவில் படம் எடுத்த மற்றொருவரை தாக்கிய ஆடவருக்கு கடந்த மே 17, அன்று ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தானாக முன்வந்து கடும் காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதான சிவகார்த்திக் பெர்னார்ட் என்ற அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Singapore Pools கடையில் லாட்டரி டிக்கெட் வாங்க சென்றபோது வாக்குவாதம்… மரணத்தில் முடிந்த சண்டை

தானாக முன்வந்து காயப்படுத்தியது மற்றும் துன்புறுத்துதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூலை 22, அன்று மாலை 6:45 மணியளவில் பிளாக் 96A Henderson சாலைக்கு அருகில் உள்ள நடைபாதையில் சிவகார்த்திக் சைக்கிள் ஓட்டி செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொலைபேசியில் இருந்து வாய்ஸ் செய்தியைக் கேட்டுக்கொண்டே சிவகார்த்திக்கின் முன்னால் சென்று கொண்டிருந்தார் 63 வயது முதியவர் ஒருவர்.

சைக்கிள் ஓட்டிச்சென்ற சிவகார்த்திக் தனது சைக்கிள் மணியை அடித்தார், ஆனால் அந்த ஆடவர் கவனிக்காமல் செல்ல, வெறுப்பான சிவகார்த்திக் ஆடவரை குறுகலாக சின்ன வழியில் முந்தி சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆடவர் சிவகார்த்திக்கை நோக்கி சத்தம் போட்டதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் பெரிதாகி, சிவகார்த்திக் அந்த ஆடவரின் நெற்றியில் குத்தினார், பின்னர் அவர் கீழே விழுந்தார்.

இதனை கண்ட மற்றொரு 56 வயதான பாதசாரி, தனது கைப்பேசியில் வீடியோ பதிவு செய்தார். இதனால் கோபமடைந்த சிவகார்த்திக் பாதசாரியை தாக்கினார்.

இதற்காக சிவகார்த்திக் என்பவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சைனாடவுனில் முதியவர் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலை வைத்து அடித்து நொறுக்கிய ஆடவர் கைது