சிறையில் அடைக்கப்பட்டார் சிவகார்த்திக் – சிங்கப்பூர் ஹெண்டர்சன் சாலையில் நடைபெற்ற வன்முறை தாக்குதலுக்கு நீதிபதி உத்தரவு

singapore henderson road cyclist case

சிங்கப்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (May 17) மற்றொரு பாதசாரியை தாக்குவதை படம்பிடித்த வழிப்போக்கரை கடுமையாக தாக்கியதற்காக சைக்கிள் ஓட்டுநர் சிவகார்த்திக் என்பவருக்கு 5 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. கடுமையான காயத்தை ஏற்படுத்திய சிவகார்த்திக் வயது 28 ஆகும்.வழிப்போக்கரை தாக்கிய சைக்கிள் ஓட்டுனர் சிவகார்த்திக் தானாக முன்வந்து குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

பிறரை காயப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டன. சிங்கப்பூரின் பிளாக் 96A Henderson சாலைக்கு அருகில் உள்ள நடைபாதையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சிவகார்த்திக் தனக்கு முன்பு அலைபேசியில் செய்தி கேட்டவாறு நடந்துகொண்டிருந்த 63 வயது முதியவரை சைக்கிளுக்கு வழிவிட்டு ஓரமாக நடக்குமாறு கூறுவதற்காக சைக்கிளின் மணியின் ஒலியை எழுப்பினார் .

சைக்கிளின் மணி ஒலியை காதில் வாங்காமல் பாதசாரி நடந்து சென்றுள்ளார். எனவே சைக்கிள் ஓட்டுனர் குறுகலான பாதையில் கடந்து சென்றுள்ளார். உடனே பாதசாரி சிவகார்த்திக்கிடம் கத்தினார் மற்றும் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி போனதால் சிவகார்த்திக் பாதசாரியை கடுமையாக தாக்கியுள்ளார்.

அந்த வழிப்போக்கர் ஒருவர் அவர்களைப் பிரிக்க முயற்சி செய்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் வன்முறையில் ஈடுபடும் சிவகார்த்திக்கை படம் பிடித்தார். தொடர்ந்து கடுமையாக தாக்கிய சிவகார்த்திக் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் ரத்தம் வடிவதை கண்டதும் வன்முறையை நிறுத்தினார்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி மாலை 6:45 மணி அளவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து வழிப்போக்கர் ஒருவர் காவல் துறைக்கு தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .காவல்துறையினர் சிவகார்த்திக் கைதுசெய்தனர்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சிவகார்த்திக், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனை கட்டணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆறு மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.