மோசமான நிலையில் வந்த பிறந்தநாள் கேக் – மனமுடைந்த சிங்கப்பூரர்

birthdaycake

தன் தந்தையின் பிறந்தநாளுக்கு ஆர்டர் செய்த கேக் மோசமான நிலையில் வந்ததையடுத்து, “க்ராப் ஒன்” பேஸ்புக் பக்கத்தில் முறையிட்ட சிங்கபூரர்.
ஜூரோங் பாயிண்டில் உள்ள eCreative நிறுவனத்தில் ஜூன் 18 அன்று ஐந்து அங்குல கேக் ஒன்றை De Long என்பவர் ஆர்டர் செய்துள்ளார் . அதை சைக்கிள் மூலம் ஒரு ரைடர் ஒருவர் டெலிவரியும் செய்துள்ளார்.

பின்னர் அதை சோதனையிட்ட போது பக்கவாட்டில் கேக் உடைந்து போவது போல் இருப்பதை கவனித்தார், கேக் உடையக்கூடியதாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று ரைடரிடம் ஏற்கனவே கூறியிருந்தும் ரைடர் கவனமாக இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது தந்தையின் பிறந்தநாளுக்கு ஆர்டர் செய்த கேக் மிகவும் மோசமான நிலையில் வந்ததால், தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார், மேலும் கேக்கை ஒழுங்காக டெலிவரி செய்ய முடியாவிட்டால், ஓட்டுநர் ஆர்டரை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து அவர் “Grab One” பேஸ்புக் பக்கத்தில் முறையிட்ட சிறிது நேரத்தில் S$34.40 டாலர்கள் அவருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.