ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் உள்ள மகனுக்காக போராடும் தந்தை – தந்தையர் தின சிறப்பு பதிவு

dad son love fathers day singapore angle man syndrome affected his son

கூடுதல் கவனிப்பு தேவைப்படும் 9 வயது மகனுக்கு, சிரிப்பு மற்றும் புன்னகையால் தொடர்புகொள்ளும் 37 வயது தந்தை. 9 வயதான தன் மகன் சேஸ் ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் என்னும் மரபணு கோளாறால் தாமதமான வளர்ச்சி, பேச்சு குறைபாடு போன்ற சிக்கல்களை சந்தித்து வருகிறான்.

பெரும்பாலான தந்தைகள், தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததையே வழங்க விரும்புவர். அனால் ஒரு கூடுதல் கவனிப்பு தேவைப்படும் குழந்தையுடன் இருந்தால் , அவர்களின் உலகம் அந்த குழந்தையைச் சுற்றியே சுழலும்
11, 9 மற்றும் 10 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார் 37 வயதான ஜபேத் சோங்.

9 வயதான தன் இரண்டாவது குழந்தை சேஸ்-சிற்கு, 2014 இல், ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் நோய் இருப்பது தெரியவந்தது. இது 15,000 பிறப்புகளில் 1 நபரை பாதிக்கும் ஒரு அரிய வகை நரம்பியல் மற்றும் மரபணு கோளாறு.
ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகள் கட்டுப்பாடில்லாமல் சிரிப்பதில் தனித்துக் காணப்படுவர். அதே போலவே சேஸ்சும் அடிக்கடியும், தூங்கும்போதும், கனவு காணும்போதும் கூட சிரிப்பார்.

அவர் சிரிப்பின் மூலம் மகிழ்ச்சியாக உள்ளாரா, பதட்டமாக உள்ளாரா, கூச்சமாக உள்ளாரா என்று அவரது பெற்றோராக, பல்வேறு வகையான சிரிப்புகளை அடையாளம் காண வேண்டியிருந்தது. மற்ற குழந்தைகளைப் போலவே அவனும் அழுகிறான், கோபப்படுகிறான் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.

சேஸ்சிற்கு பேச்சுக்குறைபாடு இருப்பதால் அவர் ஏதாவது சொல்லல விரும்பினால் அல்லது கவனத்தை ஈர்க்க விரும்பினால் தன் கைகளைக் கொண்டு நம்மை பிடிக்க முனைவார் என்றும் சேஸ்ஸின் தந்தை தெரிவித்துள்ளார்.