மூத்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் காலமானார்!

File Photo

சிங்கப்பூரில் புகழ்பெற்ற மூத்த நடனக் கலைஞரும், கலாச்சார விருதுப் பெற்றவருமான சாந்தா பாஸ்கர் (வயது 82) நேற்று (26/02/2022) இரவு காலமானார். அவருக்கு திரையுலகினர், நடன கலைஞர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து ‘Non- VTL’ விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட்!

மறைந்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 1939- ஆம் ஆண்டு இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்தவர் சாந்தா பாஸ்கர். சிங்கப்பூரின் முன்னோடி கலைஞரான பாஸ்கரை, 1955- ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். பின்னர், சிங்கப்பூருக்கு வந்தார். 1987- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிருத்யாலயா கவின் கழகத்தைத் தொடங்கினார். சிங்கப்பூரின் உயரிய கலை மற்றும் இலக்கிய விருதான கலாச்சார பதக்கம் வென்றார். கடந்த 2021- ஆம் ஆண்டு மாதர் தினத்தையொட்டி, சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் பணியாற்றிய சாந்தா பாஸ்கர், ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்

இந்த நிலையில் சாந்தாவின் கணவர் பாஸ்கரின் பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமியின் 70- வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட தொடக்க விழாவின் இரண்டாவது நாளான நேற்று (26/02/2022) நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவருக்கு, திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.