CTE விரைவுச்சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய நபர்கள்… 5 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!

File Photo : Singapore Police

மத்திய அதிவேக விரைவுச்சாலையில் (CTE) ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் போலீசாரிடம் நேற்று புதன்கிழமை (மார்ச் 9) பிடிபட்டனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

வாகன ஓட்டியின் ஹெல்மெட் கேமராவில் பதிவான அது தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் தீயாக பரவியது.

அந்த வீடியோ காட்சிகளை வைத்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது ஒன்பது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் 22 மற்றும் 33 வயதுக்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், S$5,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்: தமிழகத்தில் கூடுதல் விமான நிலையங்கள் சேர்ப்பு!