அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பாதசாரி (வீடியோ): ஆபத்தான முறையில் காரை இயக்கிய ஓட்டுனரின் உரிமம் உடனடி ரத்து

arrested after running red light at Lentor Avenue, nearly hitting pedestrian

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 34 வயதுடைய ஆடவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த டிச. 31, 2021 அன்று SG Road Vigilanteவின் YouTube சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில், கார் ஒன்று சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்கிறது, அந்த சமயம் சாலையை கடக்கும் பயணி அதிஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி – தொடரும் பரிசோதனை

இந்த வீடியோ குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறை அதன் செய்திக்குறிப்பில் தகவலை பகிர்ந்து கொண்டது.

நேற்று முன்தினம் ஜன. 4, 2022 அன்று ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஓட்டுனரை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவரின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறை மீண்டும் வலியுறுத்தியது.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை