விலைமாதுவை ஏமாற்றிய 49 வயது ஆடவர்-சிறையில் 7 வருடங்கள் தண்டனை பெற்றும் திருந்தாத குற்றவாளி

dangerous offenders keep in prison if threaten public women sex worker

சிங்கப்பூரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் ஒரு ஆடவர் பல பெண்களை ஏமாற்றி S$72,000-க்கும் அதிகமான பணத்தை பறித்துள்ளார்.2013-ஆம் ஆண்டு,பல பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக டான் சிப்புக்கு ஏழு ஆண்டுகளுக்கு சீர்திருத்தச் சிறையில் பயிற்சி மேற்கொள்ளுமாறு தண்டனை விதிக்கப்பட்டது.

ஏழு ஆண்டு தண்டனைக் காலம் நிறைவடைந்து 2020-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியேவந்த பிறகும் அவர் மேலும் 10 பெண்களிடம் மோசடி செய்து பணத்தை பறித்துள்ளார்.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களை ஏமாற்றிய டான் ,அவர்களில் நான்கு விலை மாதுக்களையும் எமாற்றியிருப்பது தெரியவந்தது.

லோக்கான்டோ என்ற விளம்பர இணையதளத்தில் தனக்கு இளம்பெண் தேவை என்று டான் விளம்பரம் கொடுத்திருந்தார்.அவரது சுயவிவரத்தில் நிதித் துறையில் பணியாற்றுவதாகவும் சம்பளம் S$60,000 என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவரது உண்மையான சம்பளம் 2000 வெள்ளிக்கும் குறைவாகும்.இதற்கு முன்பு துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்த டான்,கடந்த ஆண்டு ஜனவரி பிப்ரவரி மாதங்களில் வேலை ஏதுமில்லை.

பெண்களிடம் மோசடி செய்ததன் தொடர்பில் அவர்மீது சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார்.எதிர்வரும் மாதம் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கும்போது மேலும் 13 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.