பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் பாலியல் குற்றவாளிகள் தண்டனை காலம் முடிந்தாலும் சிறையில் மீண்டும் அடைக்கப்படுவார்கள் – அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் பதில்

dangerous offenders keep in prison if threaten public women sex worker

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினரான Joan Pereira ” பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்பு திட்டங்கள் என்ன? ” என்ற அவரது கேள்விக்கு அமைச்சர் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றவாளிகள் குறித்து சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்துதல் போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் தண்டனை காலம் முடிந்த பின்னரும் சிறையில் வைக்க முடியும் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தத் திட்டம் குறித்த முன்மொழிவு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. குற்றவாளிகள் குறைந்தபட்ச சிறை தண்டனையான 5 முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனையை அனுபவிக்க வேண்டும். குற்றவாளியின் சிறைத்தண்டனை நிறைவடையும்போது ,தண்டனை முடிந்ததும் உடனடியாக விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

குற்றவாளியின் விடுதலையின் போது ,பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் தீமைகளை ஏற்படுத்துகிறார்களா என்பதை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவர்களால் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உண்டாகும் என்றால் அவர்கள் சிறையிலேயே தொடர்ந்து அடைக்கப்படுவார்கள்.

சிறையில் இருந்து வெளியேறும் குற்றவாளிகளால், பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமானால் குற்றவாளிகளின் சிறை தண்டனை நீட்டிக்க படுவது மற்றும் பாதுகாப்பு வழங்குவது குறித்து சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.