சிங்கப்பூரில் ரகசியத் தரவுகள் கசிவு – தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் அளவிற்கு அபாயமானது!

Photo: Ministry Of Defence, Singapore

இந்த நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்பிலான தரவுகள் மொத்தம் 178 தரவுக் கசிவு நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக பொதுத் துறை அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர்.கடந்த நிதியாண்டு 108 கசிவுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 65 விழுக்காடு அதிகமாகும்.

சிங்கப்பூரின் SNDGO வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாலும் தரவுக் கசிவுகள் அனைத்தும் ‘நடுத்தர’ அல்லது ‘குறைந்த’ அளவு கடுமையானவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.தீய விளைவுகளால் அரசாங்க அமைப்பு பாதிக்கப்படும்போது வர்த்தகம் மற்றும் தனிநபர் அசாதாரணமாக உணர்வது நடுத்தர அளவு கடுமையானவை ஆகும்.

தரவுக் கசிவினால் தேசிய பாதுகாப்பையோ பொதுமக்களின் நம்பிக்கையையோ குலைப்பது போன்ற விளைவுகள் ஏற்பட்டால் கடுமையானவை என்றும் கூறப்படுகிறது.மேலும்,தனிநபருக்கு மரணம்,நிதி அல்லது மனதளவிலான பாதிப்பு போன்றவை நேர்வதும் கடுமையானவையாக வகைப்படுத்தப் படுகின்றன.

HIV நோயாளிகள் 14,200 பேரின் ரகசியத் தரவுகள் சுகாதார அமைச்சகத்தின் தரவுத்தளத்தில் இருந்தும்,223 நீதிமன்ற வழக்குகள் பற்றிய கோப்புகளை அரசாங்க நீதிமன்றத்தின் இணையதளத்திலும் அனுமதியில்லாமல் வெளியிட்டதே கடுமையான தரவுக்கசிவு நிகழ்வுகளாகும்.