8 வருடங்களாக போராடியும் கிடைக்காத பணம் – காதல் மோகத்தால் பெண்ணை நம்பி ஏமார்ந்த சோகம்.

woman

டேட்டிங் செய்ததாகக் கூறிய பெண்ணிடமிருந்து S$50,000ஐத் திரும்பப் பெற 8 வருடங்கள் வீணாகச் செலவழித்ததாகக் கூறும் 62 வயதான சிங்கபூரர். முதியவருடன் டேட்டிங் செய்வதை மறுத்த அந்த பெண், தன்னை அவதூறாக பேசுவதாகக் கூறினார்.

1996 இல் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, ​ அந்தப் பெண்ணை அவர் முதலில் சந்தித்ததாகவும், பல ஆண்டுகளாக சக ஊழியர்களாக இருந்ததாகவும், பின்னர் வேறு வேலை மாறியபோது தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் 2014 இல் அவர்கள் தற்செயலாக ஒருவரையொருவர் சந்தித்து கொண்ட போது, தனிமையில் இருந்த Xie, hong இன்மீது காதலை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார். விரைவில் hong இன் குடியிருப்பில் குடியேறி, அங்கு அவர் ஒரு அறையை மாதம் 600S$ வாடகைக்கு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தற்காலிகப் பாதுகாப்பிற்காக hongற்கு S$50,000 வழங்கியதாகவும், தனது பணத்தை வைத்திருப்பதற்கு பாதுகாப்பான இடமாகவும் அது இருக்கும் என்று நினைத்ததாகவும், மேலும் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்று தனக்கு தெரியததால் hong-இடம் கொடுத்ததாக கூறியுள்ளார். Xieக்கு பணம் திரும்பத் தேவைப்படும்போது, xie திருப்பித் தரும் வகையில், நண்பர் ஒருவர் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்திட்ட மூன்று மாதங்களிலேயே, Xie மற்றும் Hong இடையேயான உறவு மோசமடைந்துள்ளது, இதனால் xie அவரது பணத்தை அவரிடம் திரும்பக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

அனால் hong திரும்பத் தர மறுத்ததாகவும், தான் அவளை நம்பியதால் தான் பாதுகாப்பிற்காக பணத்தை அவளிடம் கொடுத்தாகவும். அவள் மறுப்பாள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன் பணத்தைத் திரும்பப் பெற எட்டு வருடங்கள் முயற்சித்தும் எந்த பலனும் இல்லை என்றும் Xie கூறியுள்ளார்.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளார் hong.