மின்சாரத் தேவையில் தன்னிறைவுப் பெற்றக் கட்டிடமாக மாற்றியமைக்க டிபிஎஸ் குழுமம் முதலீடு!

Photo: DBS Bank

 

சிங்கப்பூரில் 135 புக்கிட் திமா சாலையில் (135 Bukit Timah Road) உள்ள டிபிஎஸ் வங்கியின் அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் தற்போதைய மின்சார தேவை ஆண்டுக்கு 8,45,000 கிலோ வாட் (kilowatt hour) ஆக உள்ளது. இது வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள நான்கு அறைகள் கொண்ட 200 குடியிருப்புகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சமம். இந்த நிலையில், தனது சொந்த அலுவலகக் கட்டிடத்தை மின்சாரத் தேவையில் தன்னிறைவுப் பெற்றக் கட்டிடமாக மாற்றியமைக்க டிபிஎஸ் குழுமம் சுமார் 5 மில்லியன் சிங்கப்பூர் டாலரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

 

இது குறித்து டிபிஎஸ் குழுமம் (DBS Group) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இது குறித்து டிபிஎஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்மார்ட் லைட்டிங் (Smart Lighting), ஏர் கண்டிஷனிங் சிஸ்டம்ஸ் (Air-Conditioning Systems), குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் (Low Energy Appliances) சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டிடத்தின் மின்சார தேவை ஆண்டுக்கு 5,80,000 கிலோ வாட்டிற்கு (kilowatt hour) மேல் குறைக்கப்படும். மீதமுள்ள மின்சாரத் தேவைகள் 1,000 சதுர மீட்டர் கூரை சோலார் பேனல்கள் (Rooftops Solar Panels) அமைக்கப்படும். அதன் மூலம் ஆண்டுதோறும் 2,50,000 கிலோவாட் (kilowatt hour) மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடத்தின் குளிரூட்டலுக்காக இயற்கையாக காற்றோட்டமான இடங்களாக மாற்றப்படும். மேலும் கட்டிடத்துக்கு வெளிப்புறங்களில் மரக்கன்றுகள் நடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலக பசுமை கட்டிட கவுன்சிலின் (World Green Building Council) மதிப்பீட்டின்படி, தற்போது, ​​உலகம் முழுவதும் மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெற்ற சுமார் 500 வணிக கட்டிடங்கள் உள்ளன. சிங்கப்பூரில் முதல் மின்சார தன்னிறைவுப் பெற்ற கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது, இது சிங்கப்பூரின் தேசிய வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஸ்கூல்ஸ் 4 (National University of Singapore’s School of Design and Environment 4) ஆகும். இது 2019- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

 

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பணிகள் நிறைவடையும் போது, டிபிஎஸ் கட்டிடத்தில் வங்கியின் வாடிக்கையாளர் வங்கி குழுவில் இருந்து 400- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030-ன் (Singapore Green Plan 2030) கீழ் 80% கட்டிடங்களை பசுமை மயமாக்குவதற்கு இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.