‘டிபிஎஸ்’ வங்கியின் இணையதளச் சேவைகள் சீரானது!

Photo: DBS Bank

சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கி ‘டிபிஎஸ்’ (DBS Bank). சிங்கப்பூரில் அதிக மக்கள் பயன்படுத்தும் வங்கி ஆகும். இந்த வங்கியின் இணையப் பணப்பரிமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை மார்ச் 29- ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியவில்லை.

Taser துப்பாக்கி வைத்து ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

அத்துடன், PayLah, டிபிஎஸ் வங்கியின் டிஜி பேங்க் ஆகிய செயலிகளையும் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், காலை முதலே புகார்கள் அளித்து வந்தனர். புகார்கள் உச்சத்தை அடைந்ததால், ‘டிபிஎஸ்’ வங்கியின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், பிரச்சனையைச் சரிப்பார்த்து வருவதாகவும், சேவைகள் வழக்கமான நிலைக்கு திரும்பியவுடன் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

இணையதளப் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, மாலை 05.45 மணிக்கு இணையப் பணப்பரிமாற்றத்திற்கான இணையதளம் பக்கங்கள் மற்றும் வங்கியின் செயலிகள் வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி….சென்னையில் தரையிறங்கிய விமானம்!

இதையடுத்து, வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து, வங்கியின் இணையதளச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கி அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வங்கியின் சேவைத் தடைக் குறித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.