DBS வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை அத்துமீறி அணுகி வெளியிட்ட முன்னாள் ஊழியர்! – 42 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டு சிறைத்தண்டனை

Singapore DBS India Lakshmi villas
DBS Bank
சிங்கப்பூரில் முன்னாள் DBS வங்கி ஊழியரான லியோங் யான் சின், வாடிக்கையாளர் தகவல்களை சட்டவிரோதமாக அணுகி தரவுகளை வெளியிட்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.32 வயதான லியோங் மொத்தம் 16 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றம் அவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது.வங்கிச் சட்டத்தின் கீழ் ஆறு குற்றங்களையும்,கணினியைத் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தின் கீழ் ஆறு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.தண்டனையின் போது அவரது 42 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
2018 க்கு இடையில் DBS வங்கியின் ஊழியராக வேலைக்கு சேர்ந்த போது அவரது வேலை நோக்கத்தின் ஒரு பகுதியாக, அவருக்கு DBS இன் வாடிக்கையாளர் தகவல் அமைப்புக்கான அணுகல் வழங்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக வாடிக்கையாளர் தகவல்களை வெளியிடக் கூடாது என்று அவருக்கு தொடக்கத்திலேயே அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் லியோங் தனது நண்பர்கள், சக குற்றவாளிகளான தினத் சில்வமணி முதலியார் மற்றும் ஆங் கோக் ஹவ் ஆகியோருக்கு உதவுவதற்கு அங்கீகாரம் இல்லாமல் வாடிக்கையாளர் தகவலை அணுகினார்.
தினாத் முன்பு DBS வங்கியில் லியோங்குடன் பணிபுரிந்தார்.ஐந்து முறை DBS அமைப்பிடமிருந்து அங்கீகாரம் இல்லாமல் மீட்டெடுத்த தகவலை தினத்திடம் கொடுத்தார்.இவ்வாறு அனைத்து குற்றங்களையும் லியோங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.