இந்தியாவில் அதிக நிகர லாபம் ஈட்டும் DBS வங்கி; மிகப்பெரிய அளவில் கிளைகளை விரிவுபடுத்த திட்டம்!

DBS branch in Hong Kong vandalised with graffiti slamming PM Lee and Singapore ruling party.

DBS வங்கி இந்தியா லிமிடெட் கடந்த 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் நல்ல நிதி முடிவுகளை சமீபத்தில் அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் S$ 2.8 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது DBS வங்கி.

DBS வங்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுரோஜித் ஷோம் கூறுகையில், “இந்தியாவில் DBD வங்கி கிளைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம், அதற்கான முழு முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்”, என்று கூறியுள்ளார்.

அடுத்த 12-18 மாதங்களில் 25 இந்திய நகரங்களில் 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் touchpoints நிறுவ இந்திய DBS வங்கி விரும்புகிறது, என்று DBS வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், ஹைதராபாத், அகமதாபாத், கோயம்புத்தூர், வதோதரா, இந்தூர் மற்றும் லூதியானா ஆகிய இடங்களில் DBS 9 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.