உலகின் சிறந்த வங்கியாக சிங்கப்பூரின் DBS வங்கி தேர்வு..!

DBS from Singapore was named the world’s best bank by Euromoney magazine, a British publication.

உலகின் சிறந்த வங்கியாக DBS வங்கியை பிரிட்டிஷ் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய வங்கிகளில் முதல்முறையாக பிரிட்டிஷ் பப்பிளிகேஷன் வெளியிட்டுள்ள யூரோமனி பத்திரிகை, சிங்கப்பூரின் DBS வங்கியை உலகின் சிறந்த வங்கியாக அறிவித்துள்ளது.

இவ்விருதை கடந்த புதன்கிழமை ஜூலை 10 அன்று DBS வங்கிக்கு “Best of” என்ற தலைப்பில் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இவ்வங்கி உலகின் சிறந்த டிஜிட்டல் வங்கி என்ற பட்டத்தை யூரோமணியிடமிருந்து வென்றது, அதன் பிறகு 2016-ல் அதே சாதனையை மீண்டும் செய்தது, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பத்திரிகையான குளோபல் ஃபைனான்ஸ் வாயிலாக சிறந்த வங்கிக்கான பட்டத்தையும், கடந்த ஆண்டு நவம்பரில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் “The banker” என்ற உலகளாவிய விருதையும் வென்றுள்ளது.

யூரோமனியின் எடிட்டர் திரு. கிளைவ் ஹார்வுட் ஒரு செய்திக்குறிப்பில் கூறுகையில்; DBS வங்கி எங்கள் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட காரணம், ஒரு வங்கி இன்று எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோமோ அதை அப்படியே இந்த வங்கி பிரதிபலிகின்றது, என்று கூறினார்.

யூரோமனியின் உலகின் சிறந்த வங்கி பட்டத்தின் கடந்த வெற்றியாளர்களில் பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி, UBS மற்றும் BNP பரிபாஸ் ஆகிய வங்கிகளாகும்.

DBS வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா கூறுகையில், உலகிலேயே முதல் மூன்று மதிப்புமிக்க உலகளாவிய சிறந்த வங்கிக்கான பட்டத்தை பெற்ற வங்கி இதுவாகும் என்று பெருமையுடன் தெரிவித்தார்.