இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

வேலையின் போது பாதுகாப்பை பின்பற்றத் தவறி, அதன் விளைவாக சக ஊழியருக்கு மரணத்தை ஏற்பத்தியது தொடர்பான வழக்கில், 34 வயதான பிரைம் மூவர் கனரக வாகன ஓட்டுநருக்கு நேற்று (மே 11) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

முஹம்மது சுல்கர்னைன் பின் பாய்மென் என்ற அவரின் இந்த அலட்சிய செயலுக்காக 20 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்த்த ஓட்டுனருக்கு லாரி ஓட்டத் தடை – S$1,000 அபராதம் விதிப்பு

இந்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று நடந்தது, அப்போது கனரக வாகனத்தில் ISO டேங்க் கண்டெய்னரைச் ஏற்றுவதற்காக சுல்கர்னைன் பிரைம் மூவரை ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அவர் ஏற்றிச்செல்ல நினைத்த ISO கண்டெய்னர் மற்றொரு ISO கண்டெய்னரால் மறைக்கப்பட்டு இருந்தது என MOM கூறியுள்ளது.

சிக்கிக்கொண்ட ஊழியர்

“அவர் கவனிக்காமல், ப்ரைம் மூவரை இயக்கி, அதை இரண்டாவது கண்டெய்னருடன் இணைத்து அதை அதன் பாதையிலிருந்து நகர்த்தினார்.”

அந்த நேரத்தில், இந்திய ஊழியர் சிவசாமி நேதாஜி, இரண்டு கண்டெய்னர்களுக்கும் இடையே நின்று கொண்டிருந்தார்.

பிரைம் மூவர் பின்னால் சென்றபோது, ​​அது இரண்டாவது கண்டெய்னரை பின்னோக்கித் தள்ளியதில் இரு கண்டெய்னர்களுக்கும் இடையில் சிவசாமி சிக்கிக்கொண்டார்.

அதன் பின்னர் அதிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலையிடத்தை நிர்வகிக்கும், Bee Joo Industries நிறுவனம் மீதும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு கொடூர வேலையிட விபத்து.. இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு