டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் குறைவான மழை மற்றும் காற்று வீசும்

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் காற்று வீசும் நாட்கள் மற்றும் மழை பொழிவும் குறைவாக இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் வியாழக்கிழமை (டிசம்பர் 16) தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் பொதுவாக ஈரமான மற்றும் காற்றுடன் கூடிய சூழலை காணமுடியும் என்றாலும், வரும் இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவமழை நிலைமைகள் பொதுவாக பலவீனமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி – “PASS”காக அதிகாரிக்கு கட்டணமின்றி பாலியல் சேவை

பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

வெப்பநிலை, சில நாட்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மேலும் சில மழை நாட்களில், வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய குறுகிய கால மழை பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் எதிர்பார்க்கப்படுகிறது, அது சில நேரங்களில் மாலை வரை நீடிக்கும்.

சிங்கப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்த ஊழியருக்கு ஒமைக்ரான் ?