தீபாவளி பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

தீபாவளி பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: MWC

 

சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre) என்ற அமைப்பு, சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து, அவர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த அமைப்பு அரசு சாரா தன்னார்வ அமைப்பு ஆகும்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்.. சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகளை வெளிநாட்டு ஊழியர்களுடன் கொண்டாடி வருகிறது.

தீபாவளி பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: MWC

அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வித விதமான போட்டிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.

சாங்கி விமான நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட இரு வெளிநாட்டவர்கள்

அப்போது, மேடையின் மீதும், மேடைக்கு கீழும் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஆட்டம், பாட்டத்துடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் தங்களின் கவலைகளை மறந்து உற்சாகத்துடன் காணப்பட்டனர். இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.