தீபாவளி பண்டிகை: திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

வரும் அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், தங்கள் சொந்த ஊர்களில் பண்டிகையைக் கொண்டாட, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் விமான சேவைக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருளுடன் சிக்கிய 6 பேர் – இருவர் வெளிநாட்டினர்

குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) தொடர்ந்து நேரடி மற்றும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமின்றி, நவம்பர், டிசம்பர், 2023- ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களை காணவும் வெளிநாட்டு பயணிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

வேலையிடத்தில் லாரி மோதி கொடூர விபத்து – ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணம்

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.