சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்

Photo: Lisha Official Facebook Page

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான பாதுகாப்பது நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தீபாவளிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை (அக். 23) விடுமுறை நாள் என்பதால் அதிக கூட்ட நெரிசல் ஏற்படலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 8 கார்களை அடித்து உடைத்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர் – ஏன் அவ்வாறு செய்தார்?

மேலும், தீபாவளி கொண்டாட்டங்களின் போது சட்ட ஒழுங்கை பராமரிக்க லிட்டில் இந்தியாவில் காவல்துறை மற்றும் துணை காவல்துறை அதிகாரிகளின் ரோந்து பணி தீவீரப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மது அருந்துவதற்கான விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட விரோதமாக பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் எனவும் SPF பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

தீபாவளி நேரத்தில் சிராங்கூன் சாலையில் அதிக வாகன நெரிசல் மற்றும் மக்கள் நடமாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வாகன ஓட்டிகளுக்கு உதவவும் துணை போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

வாகன ஓட்டுனர்கள் மாற்று பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளம் வேண்டி போராட்டம்: தன் சொந்த சேமிப்பில் சாப்பாடு, போக்குவரத்தை பார்த்து வந்த அவலம்