சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு விழா நாளை தொடங்குகிறது!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு
(Photo: S.Iswaran/FB)

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். சிங்கப்பூரில் உள்ள முக்கிய நகரங்களில் அலங்கார மின் விளக்குகள் முன் நின்று பொதுமக்கள் செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்வர்.

சிங்கப்பூரில் தமிழ் பணிப்பெண், ஊழியருடம் முதலாளி வீட்டில் உல்லாசம் – உடைந்துபோன முதலாளி.. “வீட்டில் ஒருவராக அனைத்தும் செய்தேன்” என வேதனை

இந்த நிலையில், நடப்பாண்டில் வரும் அக்டோபர் மாதம் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான தீபாவளி ஒளியூட்டு நாளை (15/09/2022) மாலை 06.00 மணியளவில் பிர்ச் சாலையில் (Birch Road) நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட், தீபாவளி ஒளியூட்டைத் தொடங்கி வைக்கிறார்.

பெண்ணை அடித்து தாக்கி S$3,000 ரொக்கம் கொள்ளை – அதே நாளில் ஆடவர் கைது

இதற்கான ஏற்பாடுகளை லிசா எனப்படும் ‘லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம்’ (LITTLE INDIA SHOPKEEPERS AND HERITAGE ASSOCIATION- ‘Lisha’) செய்துள்ளது. இந்த ஒளியூட்டு விழா செப்டம்பர் 16- ஆம் தேதி முதல் நவம்பர் 13- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. நாளை முதல் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ள லிசா, சமையல் போட்டி உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

Photo: Lisha Official Facebook Page