கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது தீபாவளி ஒளியூட்டு விழா 2023!

கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது தீபாவளி ஒளியூட்டு விழா 2023!
Photo: Lisha

 

 

‘லிஷா’ (LISHA) எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், தீபாவளி ஒளியூட்டு விழா 2023 கோலாகலமாகத் தொடங்கியது.

அதிக அளவில் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சட்டென்று எகிறிய சிங்கப்பூர் மக்கள்தொகை

சிங்கப்பூரில் உள்ள பிர்ச் சாலையில் (Birch Road) உள்ள அரங்கத்தில் (Open Field) இன்று (செப்.30) மாலை 06.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூரின் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், தீபாவளி ஒளியூட்டு விழா 2023 தொடங்கியுள்ளது.

விழாவில், பறை இசை, மேளதாளங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தனர். இரவு 09.30 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள் என சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் திரு.லீ குவான் இயூவுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து 10 ஆண்டுகளாக பேனர் வைக்கும் தமிழர்!

தீபாவளி ஒளியூட்டைத் தொடர்ந்து, லிட்டில் இந்தியாவில் உள்ள சிராங்கூன் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஒளியூட்டில் நாள்தோறும் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு லிஷா அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.