சென்னை, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு டன் கணக்கில் பறக்கும் தீபாவளி இனிப்புகள்

deepavali sweets export from chennai, kovai to singapore

சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு தீபாவளி பலகாரம் டன் கணக்கில் பறக்க உள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் வரும் அக்ட். 24 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து இரு வெளிநாடுகளுக்கு தீபாவளி சிறப்பு பலகாரங்கள் பறக்க உள்ளன.

சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு XBB வகை சோதனை கட்டாயம் – அறிவிப்பு செய்த நாடு

சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானம் மூலமாக சுமார் 2 டன் இனிப்புகள் செல்ல பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் செல்லவிருக்கும் சுமார் 3 டன் இனிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் லட்டு, அல்வா, பால் வகை இனிப்புகள் ஆகியவை அடங்கும். சென்ற ஆண்டைவிட கோவையில் இருந்து செல்லும் இனிப்புகள் அளவு இந்த ஆண்டு அதிகம்.

அதைவிட சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிக அளவு இனிப்பு வகைகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் 2 பிரைம் மூவர்ஸ் வாகனம் விபத்து: ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி