20 வயது இளைஞனுக்கு மிரட்டல் – தொலைபேசியை Hack செய்து S$8000 கேட்ட அபாய ஆசாமி

hacking in singapore

சிங்கப்பூரில் ஒருவரின் தொலைபேசி Hack செய்யப்பட்டதால் விபரீதம் நடந்துள்ளது. 20 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தனக்கு வந்த அழைப்பை தனது அலுவலகத்தின் மேனேஜர் அழைப்பு என்று எண்ணி அட்டென்ட் செய்துள்ளார்.

தொலைபேசி அழைப்பை ஏற்ற பின்னர் Hack செய்யப்பட்டதாக கூறினார்.Hack செய்யப்பட்டவுடன் இளைஞர் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்று அந்த இளைஞர் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து அந்த அழைப்பை ஏற்றுள்ளார். மேனேஜர் என்று நினைத்து ஏற்ற தொலைபேசி அழைப்பில் வேறு யாரோ பேசியதால் அழைப்பை உடனடியாக துண்டித்துள்ளார். இந்த நிகழ்வு நடந்த சிறிது நேரத்தில் மெசேஜ் செயலியில் இருந்து அந்த இளைஞருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்த குறுஞ்செய்தியில் ஆபாச வீடியோ வந்துள்ளது. அந்த வீடியோவில் இளைஞரின் முகம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Deep Fake தொழில் நுட்பத்தின் மூலம் வீடியோவில் தனது முகம் மாற்றப்பட்டு இருப்பதாகவும் ,தொலைபேசியை ஹேக் செய்ததன் மூலம் தனது புகைப்படங்களை திருடி அவ்வாறு செய்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டினார்.

அந்த வீடியோவை இளைஞருக்கு அனுப்பிய Hacker, 8000 வெள்ளி கேட்டு மிரட்டியுள்ளான். இளைஞர் பணத்தை தர மறுத்ததால் வீடியோவை இளைஞரின் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறினார். அந்த சமயத்தில் திறமையாக செயல்பட்டு அந்த இளைஞர் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையை நாடினார்.

அந்த இளைஞரின் நெருங்கிய நண்பர்கள் பலருக்கும் வெவ்வேறு வெளிநாட்டு எண்களில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தன்னை மிகவும் பாதித்துள்ளதாக இளைஞர் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.