டெல்லி, சிங்கப்பூர் இடையேயான விஸ்தாரா நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

டெல்லி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது விஸ்தாரா நிறுவனம் (Vistara Airlines). இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னை,கொச்சி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானச்சேவை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்த நகரங்களின் விவரங்கள்

டெல்லி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த விமான சேவை தினசரி விமான சேவை ஆகும். இந்த வழித்தடத்தில் மட்டும் நாள்தோறும் சுமார் 18- க்கும் மேற்பட்ட விமான சேவைகளை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. எனினும், இதில் ஒரு விமான சேவை மட்டும் தான் நேரடி விமான சேவை ஆகும். டெல்லியில் இருந்து மும்பை வழியாக சிங்கப்பூருக்கு 10- க்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

அதேபோல், டெல்லியில் இருந்து கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூருக்கு மற்ற விமான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airvistara.com/in/en என்ற விஸ்தாரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.