சிங்கப்பூர் செல்ல அனுமதிக் கோரிய டெல்லி முதலமைச்சர்… முன்மொழிவை நிராகரித்த துணைநிலை ஆளுநர்!

PC :Simon Wong Delhi CM Aravind Kejriwal

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு கொண்டு வந்த ‘டெல்லி மாடல்’ பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் (High Commissioner of Singapore Simon Wong) நேரில் சந்தித்துப் பேசினார்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அப்போது, சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உச்சி மாநாட்டிலும் (World Cities Summit 2022), மேயர்கள் பங்கேற்கும் மாநாட்டிலும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்ற, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி இந்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும், அக்கடிதத்திற்கு இந்திய அரசு பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, டெல்லி முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும், துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு டெல்லி அரசு முன்மொழிவையும் அனுப்பி இருந்தது.

மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்த விரிவான தகவல்!

இந்த நிலையில், சிங்கப்பூர் பயணம் தொடர்பான முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்மொழிவை நிராகரித்த துணைநிலை ஆளுநர், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாடு மேயர்களின் மாநாடு என்பதால் முதலமைச்சர் ஒருவரின் வருகைக்கு அது ஏற்றதாக இருக்காது. எனவே, முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான முன்மொழிவை நிராகரிக்கிறேன் என்று கூறி அதற்கான முன்மொழிவு கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.