பிரதமர் மோடிக்கு கடிதம் – சிங்கப்பூர் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்க ஏன் தாமதம் ? ஆத்திரமடைந்த முதல்வர் அரவிந்த்

Indian PM Narendra Modi
Indian PM Narendra Modi

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பயணத்திற்கு மத்திய அரசு தாமதமாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசாங்கத்தின் தாமதமான ஒப்புதலுக்கு காரணம் என்ன என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.அவர்,” நான் இந்திய தேசத்தின் சுதந்திர குடிமகன்,மேலும்,நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்,நான் குற்றவாளி அல்ல.நான் ஏன் தடுக்கப் படுகிறேன்? டெல்லி மாடலை முன்னிறுத்த சிங்கப்பூர் அரசாங்கம் என்னை பிரத்யேகமாக அழைத்தது” என்று கூறினார்.

சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதல் பெற சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உலக நகரங்களின் உச்சி மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் அரசாங்கம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தது.

பாஜகாவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா இதற்குப் பதிலளித்தார்.அவர் ” சிங்கப்பூரில் நடைபெறும் மேயர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் கெஜ்ரிவால் அனுமதி கோருகிறார்.அவர் டெல்லியின் முதல்வர் என்பதை யாரேனும் நினைவுபடுத்துகிறார்கள்.எடுத்துக்காட்டாக சூரத்தின் மேயர் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டுள்ளார்.இது மேயர்களுக்கான மாநாடு என்று மத்திய அரசாங்கம் விளக்கமளித்தது ” என்று கூறினார்.

அப்படியென்றால், தங்கள் மேயரை ஏன் சிங்கப்பூர் அரசாங்கம் அழைக்கவில்லை என்று கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.