வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை ஈஸி இல்லங்க… வேலையின்போதும் குழந்தையை சுமக்கும் ஊழியர் – கண்ணீர் விட்ட நெட்டிசன்கள்

delivery rider take her baby along job Malaysia

பெற்றோராக வாழ்வது அவ்வளவு எளிதல்ல. வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாதபோது, வேலை மற்றும் குழந்தைக்கும் நீங்களே பொறுப்பு என்ற சூழல் உருவாகும்.

அப்படி வாழும் ஒரு பெண்ணை பற்றிய பதிவு தான் இது. மலேசிய பெண் ஊழியர் ஒருவர் உணவு விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்: 5 மில்லியன் பரிசு தொகையை தட்டி சென்றார்!

வேலைக்கு செல்லும் அந்த பெண் தனது குழந்தையையும் தன்னுடன் கொண்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதில், கோலாலம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அவர் தனது குழந்தையுடன் இருக்கும் TikTok வீடியோ இணையவாசிகளின் மத்தியில் அனுதாபத்தை பெற்றுள்ளது.

அந்த ஃபுட்பாண்டா பெண் ஊழியர், தனது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் ஒரு டெலிவரி பேக்கை வைத்து கொண்டு, ஒரு கைக்குழந்தையை தனது முன் பக்கத்தில் சுமந்து செல்லும் வீடியோ வைரல் ஆனது.

அந்த வீடியோவை வெளியிட்ட பெண் இது பற்ற கூறுகையில்; “நான் என் குழந்தைகளுடன் குளிரூட்டப்பட்ட காரில் வசதியாக அமர்ந்திருக்கிறோம், அதே சமயம் அந்த ஊழியரும் அவருடைய குழந்தையும் கொளுத்தும் வெயிலில் தன் வாழ்க்கைக்காக சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்” என்றார்.

அவர் அழைத்து வரும் குழந்தைக்கு இரு கண்களும் பார்வையற்றது என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

இந்தப் பெண்ணின் சுமைக்கு மத்தியில் நம்முடைய சுமையெல்லாம் ஒன்றும் இல்லை.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!