விநியோக ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் அபாயம்; கொள்கை ஆய்வுக்கழகம் எச்சரிக்கை!

Pic: TODAY

சிங்கப்பூரில் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குறுகிய கால கட்டத்தில் வருமானம் ஈட்ட உணவு விநியோக மற்றும் தனியார் வாடகை வாகன தளங்கள் உதவி புரிகின்றன.

இருப்பினும், இவற்றில் பணிபுரியும் விநியோக ஓட்டுநர்கள் வறுமையில் சிக்குவதோடு நிலையற்ற சூழலால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என கொள்கை ஆய்வுக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் தொடர்பில் அதன் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் அதிரடி சோதனை: பாதுகாப்பு நடவடிக்கைளை மீறிய 26 பேர் மீது விசாரணை

சேமிப்பு போதுமான அளவில் இல்லாத காரணத்தாலும், மத்திய சேமநிதிக் கணக்கில் போதுமான தொகை இல்லாமல் போவதாலும் வீடு வாங்குவது போன்ற தங்களின் கனவுகளை நினைவாக்க விநியோக ஓட்டுநர்கள் சிரமப்படலாம். ஆகையால், ஊழியர்களும் நிறுவனங்களும் காப்புறுதித் திட்டங்கள், மத்திய சேமநிதிக் கணக்குகள் உள்ளிட்டவற்றில் பணம் போடுவதை கட்டாயமாக்குவது போன்ற பரிந்துரைகளைக் கொள்கை ஆய்வுக்கழகம் முன்வைதுள்ளது.

மேலும், பிற துறைகளுக்கு மாறாத விநியோக ஓட்டுநர்கள் மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கலாம் என்றும் கொள்கை ஆய்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

“வேலைல இருக்கணும்னா இத செய்”… 1 முதலாளிக்கு 5 வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – 100 முதலாளிகளுக்கு செக்!