வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு சிங்கப்பூர் கடுமையான கண்டனம்!

Video Crop Image

வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. வட கொரியாவின் இத்தகைய செயலுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் விபத்து: பெண் ஒருவர் மரணம்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த பிப்ரவரி 18- ஆம் தேதி அன்று வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை (Intercontinental Ballistic Missile- ‘ICBM’) உட்பட சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை சிங்கப்பூர் கடுமையாக கண்டிக்கிறது.

வட கொரியாவின் முந்தைய ஏவுகணை சோதனைகளைப் போலவே, இது ஒரு ஆபத்தான கோபத்தை ஏற்படுத்தும் செயல், இது கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை அதிகப்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் அப்பட்டமாக மீறுவதாகும்.

“6 மாதங்கள் வரை வேலை இல்லை” – பட்டதாரி ஊழியர்களுக்கு ஏற்பட்ட சோதனை

வட கொரியா எல்லா வகையானத் தூண்டுதல் முயற்சிகளையும் கைவிட்டு, சர்வதேச கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவும், கட்டுப்படவும் வட கொரியாவுக்கு சிங்கப்பூர் எங்களின் நீண்ட கால அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.