கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பு! – புத்தாண்டில் டெங்குவுடன் அடியெடுத்து வைக்கும் சிங்கப்பூரர்கள்!

Rising dengue cases in Singapore
சிங்கப்பூரில் நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகின்றன.சுமார் 200 முதல் 300 பேர் வரை வாரந்தோறும் டெங்குவினால் பாதிக்கப்படுவதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) டிசம்பர் 5 அன்று தெரிவித்தது.
எதிர்வரும் புத்தாண்டில் டெங்கு தலைதூக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியது.இந்த எண்ணிக்கை இந்தாண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்படுகின்றன.டிசம்பர் 2 , 2022 வரை பதிவான மொத்த டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை 30,969 ஆகும்.
இது 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும் என்று NEA கூறியது.ஆனால்,2020-இல் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விடக் குறைவு.டெங்கு வழக்குகள் 2020 இல் 35,315 வழக்குகளை எட்டியது.

சிங்கப்பூர் 2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு வழக்குகளுடன் நுழையக்கூடும் என்றும் NEA கூறியது.விடுமுறை காலத்தில் பயணம் செய்வதற்கு முன், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொசு உற்பத்திக்கான சூழல் இல்லாமையை உறுதி செய்யுமாறு NEA கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் டெங்கு ஒழிப்பு குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்க சமூக தன்னார்வலர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவதாக அது கூறியது.2020 அன்று வீடுகளுக்கு எதிராக கடுமையான அபராதங்களை அமல்படுத்தியதில் இருந்து, NEA ஆய்வு செய்த 1,470 குடியிருப்பு வளாகங்களில் பல கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைக் கண்டறிந்துள்ளது.