சிங்கப்பூரில் பணியாளர்கள் எதிர்கொள்ளப்போகும் அடுத்த ஆபத்து – நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழப்பு
(Photo: National Environment Agency)

சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் கொரோனா அளவுக்கு வீரியமாக இருக்காது என்றாலும், மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்­கிக் காய்ச்­ச­லின் தன்மை வேறு­பட்டு இருக்­கும். அதனால் கொரோனா அள­வுக்குப் பொதுச் சுகா­தார நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய தேவை இருக்­காது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே வரை  8,500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் டெங்கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டுள்­ள­னர்.

சென்ற ஆண்டு முழு­வ­தற்­கும் கூட இந்த அள­வுக்­குப் பாதிப்பு பதிவாகவில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

டெங்­கிக் காய்ச்­சல் சாதாரணமாக தெரிந்தாலும், கடு­மை­யானது. ஆகை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வேலைக்­குப் போக முடி­யாத சூழ்­நிலை வரும். தங்­கள் குடும்­பங்­க­ளுக்கு மாற்று பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­களைக் செய்ய வேண்­டிய சூழல் ஏற்­ப­ட­லாம்.

டெங்­கிக் காய்ச்­சல் கார­ண­மாக பொருளாதார பாதிப்­பும் ஏற்­ப­டக்­கூடும்.

டெங்­கிக் கார­ண­மாக ஆண்டுக்கு $100 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகை இழப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்­பது அண்­மை­யில் ஓர் ஆய்வு மூலம் தெரி­ய­வந்துள்ளது.

வீட்­டில் இடுக்கு முடுக்­கான, இருட்டான இடங்­களில் மருந்­த­டிக்க வேண்­டும்.

டெங்­கிக் காய்ச்­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கொசு புதிய உரு­மா­றிய கிருமிகளை உருவாக்கக்­கூ­டும்.

ஆகை­யால் எப்­போ­தும் மக்­கள் விழிப்­பு­டன் இருந்து வர­வேண்­டும் என்று டாக்­டர் டி ஆல்­விஸ் வலி யுறுத்தினார்.