இந்த கிருமித் தொற்றுக்கு சிகிச்சை கிடையாதாம்! – நோய்களுக்கான சிகிச்சை முறையை கண்டுபிடிக்க சிங்கப்பூரில் ஆய்வு நிலையம்

Rising dengue cases in Singapore

கொசுக்களால் பரவும் Dengue,Zika போன்ற நோய்களுக்கு எதிரான சிகிச்சை முறையை கண்டறிய புதிய ஆய்வு மையம் உதவும்.இந்தாண்டு சிங்கப்பூரில் இதுவரை 15800-க்கும் அதிகமான டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.கடந்த ஆண்டு 5268 பேரிடம் டெங்கு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்த ஆய்வு மையம் சிறந்து விளங்கும் என்பதில் நம்பிக்கை இருப்பதாக Duke-NUS பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான கிறிஸ்டோபர் கூறினார்.மருத்துவப் பல்கலைகழகத்துக்கும் ஜான்சன்& ஜான்சன் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டாளித்துவ முயற்சியில் “ஜே&ஜே செட்டலைட் செண்டர் ஃபார் குளோபல் ஹெல்த் டிஸ்கவரி ” என்ற ஆய்வு மையம் நேற்று தொடங்கப்பட்டது.

‘Flavi’ எனும் கிருமியால் ஏற்படும் நோய்களுக்கு தற்போது சிகிச்சை கிடையாது.எனவே,சிகிச்சை முறையை தயாரிப்பதில் ஆய்வகம் கவனம் செலுத்தும்.ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் பேரை இந்த கிருமி தொற்றுவதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற 5-ஆவது ஆசிய டெங்கு உச்சி மாநாட்டில்,டெங்கு கிருமிப் பரவலைத் தடுக்க நோய்த் தடுப்பு மருந்துகளை உபயோகிக்கலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.