சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்!

Photo: Singapore Finance Minster Lawrence Wong Official Facebook Page

 

மே 13- ஆம் தேதி முதல் மே 17- ஆம் தேதி வரை சிங்கப்பூர் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சீனாவுக்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன துணைப் பிரதமர் டிங் க்ஸூசியாங்கின் (Vice Premier of the State Council of the People’s Republic of China Ding Xuexiang) அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பென்ஜூரு சாலையில் லாரி மோதி விபத்து: ஒருவர் மரணம்

ஷாங்காய் நகரில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் நகராட்சிக் குழுவின் செயலாளர் சென் ஜினிங் (Secretary of the Communist Party of China- ‘CPC’) மற்றும் ஷாங்காய் மேயர் கோங் ஜெங் (Shanghai Mayor Gong Zheng) ஆகியோரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். ஷாங்காயில் உள்ள சிங்கப்பூரர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அதேபோல், பெய்ஜிங்கில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சீனாவின் முக்கிய தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கும், கென்யாவுக்கும் செல்கிறார் பிரதமர் லீ சியன் லூங்!

சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்குடன், தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் டெஸ்மெண்ட் லீ, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் சிம் அன், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் முகமது, தொழில்துறை, கலாச்சாரம் மற்றும் சமூகம், இளைஞர் லோ யென் லிங் மற்றும் நிதித்துறை, வெளியுறவுத்துறை, பிரதம அலுவக அமைச்சகங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் சீனாவுக்கு சென்றுள்ளனர்.